மாநில சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு
சென்னை, மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.'ஏ மேக்ஸ்' அகாடமி சார்பில், எட்டாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி, முகப்பேரில் வரும் 15ம் தேதி நடக்கிறது. போட்டியில், சென்னை, திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறுவர், சிறுமியர் பங்கேற்க உள்ளனர்.இதில், எட்டு, 10, 12, 15 மற்றும் 20 வயது பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும், தலா 15 கோப்பை மற்றும் 10 பதக்கமும் வழங்கப்பட உள்ளன.பங்கேற்க விரும்புவோர், 13ம் தேதிக்குள், 93605 53703, 94453 32077 என்ற எண்ணகளில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.