உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்தில் மாணவர் உயிரிழப்பு

விபத்தில் மாணவர் உயிரிழப்பு

செங்குன்றம்:மீஞ்சூர், டி.வி.எஸ்., நகரைச் சேர்ந்தவர் தினேஷ், 21. இவரது தம்பி சச்சின் சாகர், 19. இவர், சவீதா கல்லுாரியில் 2ம் ஆண்டு, பி.இ., படித்து வந்தார்.நேற்று காலை 10:45 மணி அளவில், மீஞ்சூர்- - வண்டலுார் வெளிவட்ட சாலையில், 'ராயல் என்பீல்டு' ரக, இரு சக்கர வாகனத்தில், வண்டலுார் சென்றனர்.செங்குன்றம் அருகே, கோணிமேடு சந்திப்பில், மேம்பாலத்தின் மீது ஏறும்போது, வேகம் காரணமாக அவர்களது வாகன நிலைதடுமாறி விபத்தில் சிக்கியது. அதில், சச்சின் சாகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.தினேஷ் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ