உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ கவிழ்ந்து மாணவர்கள் காயம்

ஆட்டோ கவிழ்ந்து மாணவர்கள் காயம்

தரமணி, தரமணி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; ஆட்டோ ஓட்டுனர்.நேற்று முன்தினம் இரவு, தரமணி மகாத்மா காந்திநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஆறு மாணவ, மாணவியரை ஏற்றிக் கொண்டு, அவரவர் வீட்டில் விட புறப்பட்டார்.தரமணி நுாறடி சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலை மைய தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில், ஆறு மாணவ, மாணவியருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள், ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டனை, கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை