உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மானிய டீசல் நிறுத்தம்

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மானிய டீசல் நிறுத்தம்

காசிமேடு, எண்ணுார் - நெட்டுகுப்பம் முதல் திருவான்மியூர் குப்பம் வரை, 2,300 பைபர் படகுகள், 772 விசைபடகுகள் உள்ளன. இந்த படகுகளுக்கு, எண்ணுார், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள பங்குகளில், மானிய டீசல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பைபர் படகுகளுக்கு ஆண்டுக்கு, 4,000 லிட்டரும்; விசைப் படகுகளுக்கு, 18,000 லிட்டரும், மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து, 'மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்கும் பொருட்டு, படகுகளுக்கு வழங்கும் மானிய டீசல் மூன்று நாட்களுக்கு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, இந்த நடைமுறை தொடரும்' என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதற்கிடையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், பல படகுகள் ஆழ்கடலுக்கு செல்லாமல், நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை