உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

சென்னை, சென்னை வள்ளூவர் கோட்டம் பகுதியில், தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, 90 சதவீத தொடக்க கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.தொடக்க கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:தொடக்க கல்வி துறையில் பணியாற்ற கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்க கூடிய, மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். தொடர் போராட்டங்கள் வாயிலாக வலியுறுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி