உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் பஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு

தனியார் பஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு

பூந்தமல்லி, பெரம்பூர், எம்.எஸ்.எம்.தெருவைச் சேர்ந்தவர் தேஜாஸ்ரீ, 22. இவர், தனியார் கல்லுாரியில் இறுதியாண்டு சமூக பணி படித்துக் கொண்டு, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பழகுனராக பணிபுரிந்து வந்தார்.இவர், நேற்று மாலை வேலை முடித்துவிட்டு 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றார்.செம்பரம்பாக்கம் அருகே சென்ற போது, தனியார் ஊழியர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில், தேஜாஸ்ரீ தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், தேஜாஸ்ரீ உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை