மேலும் செய்திகள்
மொபைல்போன் திருடியவர் கைது
16-Aug-2025
தண்டையார்பேட்டை:கோவில் மொபைல் போன் திருடியவரை, போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை, திலகர் நகரைச் சேர்ந்த மோகன், 47. இவர், அதே பகுதியில் உள்ள, பூதகாளியம்மன் கோவிலில், நேற்று மதியம், கூழ் வார்த்தல் நிகழ்விற்கான பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது, அவரது விலையுயர்ந்த மொபைல் போனை, கோவில் ஓரம் வைத்திருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர், அந்த மொபைல் போனை எடுத்துக் கொண்டு ஓடவே, மோகன் கூச்சலிட்டுள்ளார். கோவிலில் இருந்தவர்கள், அவரை பிடித்து நையப்புடைத்து, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த குருமூர்த்தி, 19, என்பதும், இவர் மீது ஏற்கனவே ஐந்து திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து, மொபைல் போன் மீட்கப்பட்டது. விசாரணைக்கு பின், குருமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின், சிறையில் அடைக்கப்பட்டார்.
16-Aug-2025