உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் செயின் பறித்த ஜோடிக்கு வலை

பெண்ணிடம் செயின் பறித்த ஜோடிக்கு வலை

அடையாறு, அடையாறு கஸ்துாரிபாய் நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தா ராணி, 64. நேற்றுகாலை, அதே பகுதியில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். சாலையோரம், 25 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 26 வயது மதிக்கத்தக்க வாலிபரும் இருசக்கர வாகனம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். வசந்தா ராணி அருகில் சென்றதும், அவர் அணிந்திருந்த 6 சவரன் நகையை பறித்தனர். தடுக்க முயன்ற வசந்தா ராணியை தாக்கி கீழே தள்ளி விட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின் இருவரும் வாகனத்தில் தப்பி சென்றனர். அடையாறு போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, ஜோடியை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை