உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை

சென்னை: தமிழக பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்பட்ட திருவேங்கடத்தை போலீசார் இன்று (ஜூலை-14) காலையில் சுட்டுக்கொன்றனர். கடந்த வாரம் ஜூலை-5 ல் தமிழக பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் வெட்டி கொன்றது. இதில் பலர் சரண் அடைந்தனர். இந்த கொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மாயாவாதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று போலீஸ் கஸ்டடியில் உள்ள திருவேங்கடம் என்ற ரவுடி போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு நலன் கருதி ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Kanns
ஜூலை 15, 2024 11:42

Ruling Parties& Police Murdered Surrendered Gangster to Illegally Destroy Evidence. Constitutional & Sessions Courts Must Order Public Encounter of All Concerned Police WITHOUT MERCY


panneer selvam
ஜூலை 14, 2024 22:56

It is great mystery how an arrested criminal under police escorts is trying to shoot the police in guise of picking up a buried pistol


வேம்பசாமி
ஜூலை 14, 2024 22:43

இன்னும் ஏழு பேர் இருக்காங்க போலீஸ்கார்.


Bala
ஜூலை 14, 2024 16:49

கையாளத்தனம் உண்மைக் குற்றவாளியை மறைக்க?


sridhar
ஜூலை 14, 2024 15:49

அடுத்த சூர்யா படத்துக்கு கதை ரெடி.நீதிமன்றத்தில் வக்கீல் சூர்யா தண்டனை பெற்று தருகிறார் .


Munish
ஜூலை 14, 2024 14:40

முக்கிய குற்றவாளியா முக்கிய சாட்சியா?


ஆரூர் ரங்
ஜூலை 14, 2024 14:35

கேஸே பொன்முடி வழக்கு மாதிரி ஆக்கப்படுமோ. தாகி, ராமஜெயம், ஆலடி அருணா மாதிரி தன்னைத்தானே கொன்றதாக ....


duruvasar
ஜூலை 14, 2024 14:26

கோபாலபுரம் யார் கொக்கா ?


Balasubramanian
ஜூலை 14, 2024 14:23

உச்ச நீதிமன்றம் என்கௌன்டர் என்ற பெயரில் சுட்டுத் தள்ளுவதை 2011 இல் கடுமையாக விமர்சித்து உள்ளது! ஆக இந்த போலீசார் விசாரணைக்கு உட்படுத்த படலாம்!


sridhar
ஜூலை 14, 2024 15:43

அதே உச்ச நீதிமன்றம் கைது தீர்ப்புக்கு பின் ஒரு ஆளுக்கு , பாவம் வயசாகிடுச்சு என்று விடுதலை கொடுத்திருக்கு.


அப்புசாமி
ஜூலை 14, 2024 14:19

ஆகா... சரணடைந்த ஒரு சுதந்திர போராட்ட தியாகியை இப்பிடி அநியாயமா சுட்டுக் கொன்னுட்டாங்களே.. இ.பி.எஸ் சுக்கு இதயம் வலிக்குதே..


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி