உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்தில் வாலிபர் பலி உறவினர்கள் மறியல்

விபத்தில் வாலிபர் பலி உறவினர்கள் மறியல்

தரமணி சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 28; சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார். நேற்று முன்தினம், பெரும்பாக்கத்தில் உள்ள உறவினர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நள்ளிரவு வீடு நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.ஓ.எம்.ஆர்., கந்தன்சாவடி அருகில் சென்ற போது, மெட்ரோ பணிக்காக நிறுத்தியிருந்த லாரியின் பின்பகுதியில் மோதினார். இதில், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.எச்சரிக்கை விளக்கு எரிய வைக்காமல், லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்திருந்தனர். விபத்திற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி, விக்னேஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலின்படி வந்த தரமணி போலீசார் பேச்சு நடத்தி, அவர்களை கலையச் செய்தனர். விபத்து தொடர்பாக, கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி