உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அப்பார்ட்மென்ட்வாசிகளுக்கு அன்பு பரிசு கொண்டாடி மகிழ்ந்த திருவேற்காடு குடியிருப்புவாசிகள்

அப்பார்ட்மென்ட்வாசிகளுக்கு அன்பு பரிசு கொண்டாடி மகிழ்ந்த திருவேற்காடு குடியிருப்புவாசிகள்

திருவேற்காடு:'ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் - இது அப்பார்ட்மென்ட்வாசிகளுக்கு கோலாகல விழா' என, தங்கள் மகிழ்ச்சியை இருபக்க கவிதையாக்கி, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி தெரிவித்தார், திருவேற்காடு ஆர்.எம்.கே., குடியிருப்பு வாசியான ஜெயா கண்ணன். இவர் வாசித்த கவிதையை குடியிருப்புவாசிகள் ரசித்தனர்.இயந்திர தனமான வாழ்க்கையில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைத்து, 'கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதற்கு கிடைக்கும் பெரும் வரவேற்பால், மகிழ்ச்சியுடன் சென்னையின் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளில், கோலாகலமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.அந்த வரிசையில், திருவேற்காடு, சுந்தர சோழபுரத்தில் உள்ள ஆர்.எம்.கே., சோழா அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நிகழ்ச்சி குதுாகலமாக நடந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று, அற்புத விழாவாக மாற்றினர்.நிகழ்ச்சிக்கு, 'கிட்டீ பட்டீ, பூர்விகா அப்ளையன்ஸ், நிசான், மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ், குருதேவ் ஸ்கோடா, ஆதித்யா போர்ஸ், போகா ஈவென்ட்' ஆகியவை இணைந்து, உறுதுணையாக இருந்தன.இந்த நிகழ்வில், கோலப்போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மாரத்தான், ஆடல், பாடல் நிகழ்ச்சி, சிறுவர் விளையாட்டு, மேஜிக் ஷோ, உறியடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. அனைத்துவித போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.சென்னையை பொறுத்தவரை, கலை மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பொதுவான இடங்களில் நடக்கும். ஆனால், குடியிருப்புவாசிகள் ஒன்றிணைந்து கொண்டாடியது சந்தோஷமாக உள்ளது.டி.கோகுல கிருஷ்ணன், குடியிருப்பின் தலைவர்.குடியிருப்புவாசிகளை ஒன்றிணைக்கும், 'தினமலர்' நாளிதழின் நாட்டம் சந்தோஷத்தை தந்தது. அதற்காக 'தினமலர்' நாளிதழை எப்படி பாராட்டினாலும் தகும்.ஜெயா கண்ணன், குடியிருப்புவாசிமீண்டும் எங்கள் கிராமத்திற்கு சென்று திருவிழாவை ரசித்தது போன்ற உற்சாகத்தை கார்னிவல் கொண்டாட்டம் தந்தது. போட்டிகள், பல்வேறு நிகழ்ச்சிகளால் உற்சாகமடைந்தோம்.3. டி. ரகுராமன், குடியிருப்புவாசி.'தினமலர்' கார்னிவல் கொண்டாட்டத்தில், பொழுபோக்கு, ஷாப்பிங் என இரண்டும் ஒரே அமைந்தது சிறப்பாக இருந்தது. குடும்பத்தலைவியர் அனைவரும் 'ஷாப்பிங்' செய்து, நிகழ்ச்சியை கண்டு களித்தோம்.திவ்யா முனிசேகர், குடியிருப்புவாசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை