உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது

அயனாவரம், அயனாவரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, ராம்பாபு, 39, பிரகாஷ், 50, ஆகிய இருவரையும் அயனாவரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர்கள் அளித்த தகவல்படி, நேற்று முன்தினம் இரவு, அயனாவரம், ஜீவா பார்க் அருகே மூவரை பிடித்து சோதனை செய்ததில், சிறு, சிறு பொட்டலங்களாக 2.5 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.அயனாவரம், வெங்கடேசன் தெருவைச் சேர்ந்த காக்கா என்ற ஆகாஷ், 24, சோமசுந்தரம் தெருவைச் சேர்ந்த பூனை என்ற பிரித்திவிராஜ், 22, வில்லிவாக்கம் பிரவீன்குமார், 22, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.மூவரும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அயனாவரம், தலைமைச் செயலக காலனி உள்ளிட்ட பகுதிகளில் விற்பது தெரிந்தது.

பூந்தமல்லி

பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் நேற்று, ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் 1.5 கிலோ கஞ்சா இருப்பது, போலீசாருக்கு தெரிய வந்தது. சென்னீர்குப்பம் ஆட்டோ ஓட்டுநர் சங்கர், 23, என்பவர் ஆகாஷ், 21, பிரவீன், 24, சையது ஈசாக்,19, ஆகியோர் ஆட்டோ ஓட்டுவது போல் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. ஆட்டோ, 1.5 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா விற்ற நான்கு வாலிபர்களையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ