உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மொபைல் போன் திருடிய மூன்று சிறுவர்கள் கைது

மொபைல் போன் திருடிய மூன்று சிறுவர்கள் கைது

வண்ணாரப்பேட்டை,சேலம், சின்ன திருப்பதியை சேர்ந்தவர் பால்ராஜ், 37. இவர் தன் நண்பரை பார்க்க, கடந்தாண்டு, அக்., 29 ல் வண்ணாரப்பேட்டை வந்தார். இரவில், டி.எச்., சாலையில் உள்ள ஆட்டோ ஒன்றில் துாங்கியுள்ளார்.சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, சட்டைப் பையில் வைத்திருந்த, விலையுயர்ந்த மொபைல் போன் திருடு போனது.வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, 14, 17 வயதுடைய இரு சிறார்களை கைது செய்தனர்.இதில் தலைமறைவாக இருந்த, 17 வயதுடைய இரு சிறுவர்கள், 15 வயதுடைய ஒரு சிறுவர் உட்பட மூன்று பேரைநேற்று கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை