மேலும் செய்திகள்
இன்று இனிதாக (04.10.2024)
04-Oct-2024
ஆன்மிகம் நவராத்திரி விழாகற்பகாம்பாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரக் காட்சி, மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர். நிர்த்யாலயா நாட்டிய மாணவர்கள் பரதநாட்டியம், மாலை 6:00 மணி. திருமுறை பாராயணம், மாலை 6:00 மணி. பின்னணிப் பாடகர் வேல்முருகன் பக்திப்பாடல்கள் இசைக் கச்சேரி, இரவு 7:00 மணி. இடம்: ஆண்டவர் கோவில், வடபழனி. மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், மாலை 6:30 மணி. பக்தி இசை, காலை 9:00 - 12:00 மணி வரை. பரதநாட்டியம் மாலை 3:00 - 8:00 மணி வரை. இடம்: காமாட்சி அம்மன் கோவில், மாங்காடு. உற்சவ தாயார் மஹிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதி உற்சவம். இரவு 7:00 மணி. இடம்: வடிவுடையம்மன் கோவில், திருவொற்றியூர். மஹிஷாசூரமர்த்தினி அலங்காரம், இரவு 7:00 மணி. இடம்: பொன்னியம்மன் கோவில், அஜாக்ஸ், திருவொற்றியூர்.உற்சவர் புறப்பாடு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சூரிய பிரபை வாகன புறப்பாடு, காலை 9:00 மணி. சந்திர பிரபை வாகன புறப்பாடு, மாலை 6:00 மணி. இடம்: டி.டி.டி., பெருமாள் கோவில், தி.நகர். வேதவல்லி தாயார் லட்சார்ச்சனை, மாலை 4:00 மணி. தாயார் அம்ச வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.புரட்டாசி திருவிழாஏழாம் நாள், அய்யா மலர்முக சிம்மாசனம் வாகனத்தில் பதிவலம் வருதல். இரவு 8:00 மணி, இடம்: அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், மணலிபுதுநகர்.வள்ளலார் வழிபாடுபாராயணம், ஜோதி வழிபாடு, மாலை 6:00 மணி. இடம்: நித்திய தீபம் தர்மசாலை, புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.வராஹி அறச்சபைநாட்டு சர்க்கரை அபிஷேகம், காலை 7:00 மணி, கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி முதல். இடம்: எஸ்.எஸ்., மஹால், பள்ளிக்கரணை.குங்கும அர்ச்சனைஅம்பாள் சிறப்பு அலங்காரம், கன்னிப் பெண்கள் குங்கும அர்ச்சனை, கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், ஜல்லடியன்பேட்டை.
04-Oct-2024