உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்

வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்

சென்னை: வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தாக்கும் ரவுடிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்தோர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரவையின் தலைவர் டைமன்ராஜா வெள்ளையன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திரளானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். கோயம்பேடு வணிக வளாகத்தில் நடக்கும் மெட்ரோ பணியை விரைந்து முடிக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள வியாபார நிலையங்களுக்கு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற தடை விதிக்கக்கூடாது. வியாபாரிகளை மிரட்டி மாமூல் கேட்டு தாக்கும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை