| ADDED : பிப் 01, 2024 12:39 AM
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, சென்னையில் 62 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சென்னை காவல் துறையில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருவோர், பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அதன்படி, மயிலாப்பூர் குற்றப் பிரிவு ஆய்வாளர் கண்ணன், ராயப்பேட்டை குற்றப் பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் குற்றப் பிரிவு ஆய்வாளர் சாம் வின்சன்ட் ஆகியோர், ஆவடி கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர். காசிமேடு சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் கன்னியப்பன், ராமாபுரம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் கோவிந்தராஜ், பேசின் பாலம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் புவனேஷ்வரி ஆகியோர், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.நேற்று மட்டும், சென்னை கமிஷனர் அலுவலகத்தின் கீழ் பணிபுரிந்து வந்த 62 இன்ஸ்பெக்டர்கள், பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் பிறப்பித்துள்ளார்.