| ADDED : ஜன 14, 2024 12:28 AM
சென்னை,மெரினாவில், காணும் பொங்கல் அன்று தேவைப்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என, சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :* காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது.* காமராஜர் சாலையில் வாகனங்கள் அதிகரித்த உடன், போர் நினைவுச் சின்னத்திலிருந்து கலங்கரை விளக்கம் செல்லும் வானகங்கள் வழக்கம் போல் அனுப்பபடும். கலங்கரை விளக்கத்திலிருந்து - போர்நினைவு சின்னம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரதி சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, பெல்ஸ் சாலை - வாலாஜா சாலை வழியாக செல்லலாம்.* வாலாஜா சாலையில் இருந்து, விக்டோரியா விடுதி சாலை செல்ல அனுமதி கிடையாது. பாரதி சாலையிலிருந்து, விக்டோரியா விடுதி சாலை செல்லலாம். வாகன நிறுத்தம் இடத்தின் ஏற்பாடுகள் : விக்டோரியா வார்டன் விடுதிகலைவாணர் அரங்கம் பார்க்கிங்மாநிலக்கல்லுாரிசென்னை பல்கலைக்கழகம்சேப்பாக்கம் ரயில் நிலையம்லேடி வெலிங்டன் பள்ளிசீனிவாசபுரம் லுாப் சாலை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.