உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூ - வீலர்கள் மோதி விபத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர் பலி

டூ - வீலர்கள் மோதி விபத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர் பலி

எண்ணுார்:எண்ணுார், அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர், 42, கேபிள் டி.வி., ஆப்ரேட்டர். இவர் நேற்று முன்தினம் இரவு, ஐ.டி.சி., - நெய்தல் நகர் சாலையில் தனது 'பேசினோ' டூ - வீலரில் சென்று கொண்டிருந்தார். சான்கோ கம்பெனி, எண்ணுார் விரைவு சாலையில் ஏற முயன்ற போது, ராயபுரம் - எண்ணுார் நோக்கி சென்ற, பாரதியார் நகரைச் சேர்ந்த கிறிஷ்டியன் ராஜ், 52, என்பவரின் டூ - வீலர் மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த எண்ணுார் போக்குவரத்து போலீசார், இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக, தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர் சந்திரசேகர், நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கிறிஷ்டியன் ராஜ், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை