உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் இருவர் கைது

 வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் இருவர் கைது

சென்னை: 4-: பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் பரத், 20 என்பவரை அபிராமபுரம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜாமினில் வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, நவ., 13ம் தேதி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தலைமறைவான பரத்தை அபிராமபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர். அதேபோல் சேத்துப்பட்டில் பார்த்திபன் என்பவரை செய்த கொலை வழக்கில் 2017ம் ஆண்டு கைதாகி ஜா மினில் வந்த ஸ்ரீதர், 24 என்பவரும் தலைமறைவானார். பிடிவாரன்ட் பிறப்பிக்கப்ப ட்ட நிலையில் சேத்துப்பட்டு போலீசார் ஸ்ரீதரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ