உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி - பைக் மோதி விபத்து இருவர் பலி

லாரி - பைக் மோதி விபத்து இருவர் பலி

சித்தாமூர்,நேருக்குநேர் லாரி - பைக் மோதிய விபத்தில், இருவர் உயிரிழந்தனர். சித்தாமூர் அடுத்த புத்திரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 27. தனியார் ஊழியர். இவர், நேற்று காலை, 'பஜாஜ் பல்சர்' பைக்கில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், 52, என்பவரை ஏற்றிக்கொண்டு, மதுராந்தகம் நோக்கிச் சென்றார். காலை 6:00 மணியளவில், சித்தாமூர் அடுத்த கொல்லத்தநல்லுார் அருகே சென்றபோது, சித்தாமூரில் இருந்து எதிரே வந்த லாரி, இவர்களது பைக் மீது மோதியது. இதில், பைக்கில் சென்ற மணிகண்டன், ராமலிங்கம் ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை