உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது தெரு நாய்கள் கடித்ததில் பெண் உட்பட 2 பேர் காயம்

பொது தெரு நாய்கள் கடித்ததில் பெண் உட்பட 2 பேர் காயம்

சென்னை, தெருநாய்கள் கடித்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர். சிந்தாதிரிப்பேட்டை, ரிச்சி தெருவைச் சேர்ந்தவர் சங்கீதா, 23. இவர், நேற்று முன்தினம் மதியம் தண்ணீர் எடுப்பதற்காக பக்கத்து வீட்டிற்கு சென்றார். அப்போது, அப்பகுதியில் குட்டி போட்டிருந்த நாய், அவரது தொடையில் கடித்தது. இரவு 11:00 மணியளவில் வலி அதிகமாகவே, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மற்றொரு சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சாடிபுள் மோண்டல், 28 என்பவர், நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணி பத்திரிகையாளர் மன்றம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, தெரு நாய் ஒன்று அவரது இடது காலில் கடித்தது. உடனே அவர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இச்சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை