உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழக்கறிஞரை தாக்கிய இருவருக்கு காப்பு

வழக்கறிஞரை தாக்கிய இருவருக்கு காப்பு

வண்ணாரப்பேட்டை, ராயபுரம், ஆதாம் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ், 32; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். நேற்று முன்தினம் இரவு, வண்ணாரப்பேட்டை, மாடல் லைன் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றார்.தன் வாகனத்தை, 'டி' பிளாக் அருகே நிறுத்தியிருந்தார். நண்பரை பார்த்து திரும்பி வந்து, வாகனத்தை எடுக்க முயற்சித்தார். அப்போது, அங்கு நின்றிருந்த இருவர், 'இங்கு எதற்காக வாகனத்தை நிறுத்தினாய்' என, சபாஷிடம் வாக்குவாதம் செய்து, கை மற்றும் பிளாஸ்டிக் பக்கெட்டால், அவரை தாக்கியுள்ளனர்.இதில், அவருக்கு தலை மற்றும் கண்ணில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பப்லு என்ற வினித்குமார், 26, சந்தோஷ், 24, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பின், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.இதில், வினித்குமார் மீது, 14 வழக்குகளும், சந்தோஷ் மீது, மூன்று வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ