மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
31-Jan-2025
ஆவடி, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷரோன் ராஜ், 18. இவர், நேற்று காலை 10:30 மணியளவில், அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற மின்சார ரயிலில் ஏறியுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தார்.அண்ணனுார் அருகே ரயில் சென்றபோது, தவறி விழுந்து, அதே ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அதேபோல், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில், சாந்தி புரத்தைச் சேர்ந்தவர் அகிலன், 62. நேற்று காலை 7:00 மணி அளவில், திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்தபோது, சென்னை சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
31-Jan-2025