மேலும் செய்திகள்
பேருந்தில் பயணியிடம் ரூ.75,000 திருட்டு
27-Apr-2025
மாதவரம், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்விர்சிங், 30. இவர், சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில், சூப்பர்வைசராக பணியாற்றுகிறார்.கடந்த 12ம் தேதி, மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே, மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார்.அப்போது, பின்னால் பைக்கில் வந்த இருவர், ஜஸ்விர்சிங் கையிலிருந்த மொபைல் போனை பறித்துச் சென்றனர்.இதுகுறித்து அவர், மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா உதவியுடன், மொபைல் போன் திருடர்களை தேடி வந்தனர்.அதில், வால்டாக்ஸ் சாலையை சேர்ந்த உதயகுமார், 21, மற்றும் வசந்தகுமார், 20, ஆகிய இருவரும் மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்யதனர். கைது செய்யப்பட்ட இருவரும், நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
27-Apr-2025