மேலும் செய்திகள்
தனியார் பஸ் மோதி கொத்தனார் பலி
01-Mar-2025
சென்னை :சோழிங்கநல்லுார் தொகுதி குடியிருப்போர் பொது நலச்சங்க நிர்வாகிகள், பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் துணை கமிஷனர் சமீசிங்மீனாவை நேற்று சந்தித்து, மனு அளித்தனர்.அதன் விபரம்:வேளச்சேரி பிரதான சாலையில், பள்ளிக்கரணை முதல் காமாட்சி மேம்பாலம் வரை, 2.5 கி.மீ., துாரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இரண்டு ஆண்டுகளாக, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கு, துணை கமிஷனர், ''வடிகால் பணியை வேகமாக முடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்,'' என பதில் கூறி உள்ளார்.
01-Mar-2025