உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை: அதிகாரிகள் தூக்கம் கலைவது எப்போது?

சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை: அதிகாரிகள் தூக்கம் கலைவது எப்போது?

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள இறைச்சி கடைகளில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். இதன் வாயிலாக, சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை தடுக்கப்பட்டது.இந்த நிலையில், மத்திய வட்டாரத்திற்கு உட்பட்ட திரு.வி.க., நகர், அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய ஐந்து மண்டலங்களை தவிர, மற்ற மண்டலங்களில் சுகாதார ஆய்வாளர்கள், தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாகவே மத்திய வட்டாரத்திற்கு உட்பட்ட மண்டலங்களில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள், அதிகாரிகளுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே, அங்கும் இங்குமாய் ஓரிரு கடைகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.மத்திய வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் மட்டும், 1,235 இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. சுகாதார ஆய்வாளர்களின் அலட்சியத்தால், தற்போது சில கடைகளில் சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை செய்யப்படும் கடையின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அசைவ பிரியர்களின் உடல்நலம் பாதுகாக்கப்படும்.

உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை மெரினா. சுற்றுலா தலமான இங்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் சுகாதாரமற்ற எண்ணெயில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம், மாதத்திற்கு ஒருமுறை ஐந்து மண்டல சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்வர். அப்போது சுகாதாரமற்ற எண்ணெய்களை பறிமுதல் செய்து, குழி தோண்டி ஊற்றி அழித்து விடுவர். மேலும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பர். ஆனால், தற்போது எவ்வித நடவடிக்கையும் சுகாதார ஆய்வாளர்கள் எடுப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி