உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வி - கார்டு ஏர்விஸ் மின் விசிறி ரத்னா பேன் ஹவுசில் அறிமுகம்

வி - கார்டு ஏர்விஸ் மின் விசிறி ரத்னா பேன் ஹவுசில் அறிமுகம்

சென்னை :சென்னை ரத்னா பேன் ஹவுசில், 'வி - கார்டு ஏர்விஸ்' அதிநவீன மின்சார சேமிப்பு திறன் உடைய பி.எல்.டி.சி., சீலிங் மின் விசிறிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், 'ஏர்விஸ்லைட், ஏர்விஸ்பிரைம், ஏர்விஸ்பிளஸ்' ஆகிய மூன்று சிறப்பான மாடல்கள் இடம்பெறும்.சக்தி வாய்ந்த செயல்திறனுடன் நேர்த்தியான அழகியலை ஒருங்கிணைக்கும் மின் விசிறிகள், 35 வாட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிற ஆற்றல்மிக்க மோட்டார் வாயிலாக இயக்கப்பட்டு, அதிகபட்ச வேகத்தை வழங்குகின்றன.ரத்னா பேன் ஹவுஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் விஜய் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''வாடிக்கையாளர்களுக்கு, சமீபத்திய தயாரிப்பான, 'ஏர்விஸ் சீரிஸ்' பி.எல்.டி.சி., மின் விசிறிகளை அறிமுகம் செய்வதில் உற்சாகம் கொள்கிறோம். இது, வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பம், வசதி வழங்குவதில் ஆழமான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது'' என்றார்.'வி - கார்டு' இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை பிரிவு முதுநிலை துணை தலைவர் தீபக் அகஸ்டின் கூறும்போது, ''சென்னையின் பிரபலமான சில்லரை நிறுவனங்களுள் ஒன்றான ரத்னா பேன் ஹவுசில், எங்களது சமீபத்திய தயாரிப்பான ஏர்விஸ் சீரிசை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை