உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆலந்துார் - நந்தம்பாக்கம் இடையே வாகன வசதி

ஆலந்துார் - நந்தம்பாக்கம் இடையே வாகன வசதி

சென்னை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் பாஸ்ட் ட்ராக் நிறுவனம் இணைந்து, புதிய இணைப்பு வாகன வசதியை நேற்று துவக்கின. இந்த புதிய இணைப்பு வாகனம் வாயிலாக, ஆலந்துார் மெட்ரோவில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை நந்தம்பாக்கம் இடையே, 15 முதல் 20 நிமிடங்களில் இணைப்பு வாகன சேவை இயக்கப்படும். இந்த 'ஏசி' வாகனத்தில் 18 இருக்கைகள் உள்ளன. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7:30 மணி முதல் 10:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் இயக்கப்படும். ஒருவருக்கு 35 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை