உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வளர்ப்பு நாய் கடித்து தெரு நாய் பலி கால்நடை மருத்துவர் மீது குற்றச்சாட்டு

 வளர்ப்பு நாய் கடித்து தெரு நாய் பலி கால்நடை மருத்துவர் மீது குற்றச்சாட்டு

வேளச்சேரி: வேளச்சேரியில் வளர்ப்பு நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த தெரு நாய், நேற்று பலியானது. கால்நடைத்துறை மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான், தெரு நாய் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவர், மூன்று நாய்கள் வளர்த்து வருகிறார். கடந்த 21ம் தேதி, 'பிட்புல்' வகை நாய், திறந்திருந்த கேட் வழியாக வெளியே வந்து, தெருவில் நின்ற தெரு நாயை விரட்டி விரட்டி கடித்தது. தெரு மக்கள் துரத்தியும், கடிப்பதை வளர்ப்பு நாய் விடவில்லை. ஒரு கட்டத்தில் பலத்த காயமடைந்த தெரு நாய், அங்கிருந்து சென்றது. இந்நிலையில், நேற்று காலை, அந்த தெரு நாய் இறந்தது. உடனே, மாநகராட்சி ஊழியர்கள், இறந்து கிடந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பகுதிமக்கள் கூறியதாவது: நாய்கள் சண்டையிட்டு கடித்துக்கொள்வது இயல்பானது தான். வெறிநாய் கடித்தால் தான் உயிர் பலி ஏற்படும். பிட்புல் நாய், வெறிநோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை கடித்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்கும். காயமடைந்த தெரு நாய்க்கு முறையான சிகிச்சை அளித்திருந்தால், உயிர் பிழைத்திருக்கும். மாநகராட்சி கால்நடைத்துறை மருத்துவர்களிடம் கூறியும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. வளர்ப் பு நாய்க்கு முறையான தடுப்பூசி போட்டார்களா, உரிமம் வாங்கினார்களா என, அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். இல்லையெனில், அந்த நாயை வளர்ப்பவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை