உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கமிஷனர் அலுவலகத்தில் விக்ரமன் ஆஜர்

கமிஷனர் அலுவலகத்தில் விக்ரமன் ஆஜர்

சென்னை, சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்தவர் விக்ரமன்; வி.சி., மாநில இணை செய்தி தொடர்பாளர். இவர், 'டிவி' நிகழ்ச்சியான 'பிக்பாஸ்' வாயிலாக பிரபலமானவர்.இவர் மீது லண்டனில் வசித்து வரும் கிருபா முனுசாமி என்பவர், 'ஆன்லைன்' வாயிலாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.அதில், 'விக்ரமன் சமூக வலைதளம் வாயிலாக தனக்கு பழக்கமானவர். பின் காதலிப்பதாக கூறி, 13 லட்சம் ரூபாய், விலை உயர்ந்த மடிக்கணினி உள்ளிட்டவற்றை தன்னிடம் இருந்து வாங்கிக் கொண்டார். தற்போது தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதுடன், ஜாதி பெயரை கூறி திட்டுகிறார்' எனக் குறிப்பிட்டு இருந்தார்.புகாரின் அடிப்படையில், வடபழநி மகளிர் போலீசார் விக்ரமன் மீது, 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.வழக்கு விசாரணை தொடர்பாக, விக்ரமன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி, தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் ஆஜராவதாக கூறிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.விசாரணைக்கு பின் வெளியே வந்த விக்ரமன், பத்திரிகையாளர்களை பார்த்ததும் முகத்தை மூடியபடி காரில் ஏறிச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை