உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழப்பு

 கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழப்பு

போரூர்: திருவண்ணாமலை, கொடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 56. இவரது மனைவி சுலோச்சனா, 55. இருவரும், போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம், சொந்த ஊர் செல்வதற்காக, போரூர் சுங்கச்சாவடி நிறுத்தத்தில், ராஜா காத்திருந்தார். அப்போது அவரது மனைவி சுலோச்சனா, வேதநாயகம் என்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கினார். இதை பார்த்து ஆத்திரமடைந்த ராஜா, பையில் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கினார். சுலோச்சனாவுடன் வந்த வேதநாயகம் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில், ராஜா காயமடைந்தார். இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சுலோச்சனா, நேற்று காலை உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவு செய்த வானகரம் போலீசார், சிகிச்சை பெற்று வரும் ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ