உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு ஊழியரை தாக்கியவருக்கு கம்பி

அரசு ஊழியரை தாக்கியவருக்கு கம்பி

கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, இரட்டைக்குழி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 49; வனத்துறை தலைமை செயலக உதவி அலுவலர். இவர், புதுவண்ணாரப்பேட்டை, புத்தா செட்டி தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான நரசிம்மன், 49, என்பவருக்கு, கடந்தாண்டு 3 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.இதில், 1 லட்சம் ரூபாயை நரசிம்மன் திருப்பிக் கொடுத்துள்ளார்; மீதமுள்ள 2 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மீதி பணத்தைக் கேட்க நரசிம்மன் வீட்டிற்குச் சென்ற வெங்கடேசனை, தலை மற்றும் கையில் கட்டையால் தாக்கி உள்ளார். படுகாயமடைந்த வெங்கடேசனை அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்த புகாரின்படி, கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, நரசிம்மனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ