வங்கியில் தொழில் கடன் பெற்று மோசடி செய்த பெண் கைது
சென்னை, சவுத் இந்தியன் வங்கியில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து தொழில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நேற்று வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.சவுத் இந்தியன் வங்கி, வளசரவாக்கம் கிளையின் மேலாளராக பணிபுரிபவர் யூஜின் வீனஸ். இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் ஒரு புகார் அளித்தார்.அதன் விபரம்:கோடம்பாக்கத்தைச் சேர்ந்த நகோமி, 39, கமலக்கண்ணன், 41, ஆகிய இருவரும், போலியான ஆவணங்களை தயார் செய்து வங்கியில் சமர்ப்பித்து தொழில் கடன் பெற்றனர். வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். 60.76 லட்சம் ரூபாயை திரும்ப பெற்று தர வேண்டும்.இதில் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதுகுறித்து விசாரித்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த நகோமி, என்ற பெண்ணையும் கைது செய்தனர். அவரது கணவரும், முக்கிய குற்றவாளியுமான கமலக்கண்ணனை, போலீசார் தேடி வருகின்றனர்.