உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

திருவொற்றியூர், திருவொற்றியூர், எஸ்.பி.கோவில் தெருவைச் சேர்ந்த லதா, 56. தினமும் அதிகாலை, நடைபயிற்சி செல்வது வழக்கம். நேற்று காலை, நடைபயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை.இதற்கிடையில், விம்கோ நகர் - கத்திவாக்கம் ரயில் நிலையம் இடையே, ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத ரயில் மோதி, லதா உயிரிழந்தது தெரியவந்தது.தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், இறந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி