உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் மயங்கி விழுந்து பெண் இறப்பு

சாலையில் மயங்கி விழுந்து பெண் இறப்பு

கொளத்துார்,பாடி, அயோத்தி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி ப்ரீத்தி, 28. நாகராஜ், பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி.இவர், பாபா நகர் 6வது தெருவில் உள்ள சிவதாணு டிரஸ்ட் சார்பில் வழங்கப்படும் உதவிகளை பெற, கணவருடன் ப்ரீத்தி சென்றுள்ளார்.பாபா நகர் ஐந்தாவது தெருவில் நடந்து சென்றபோது, ப்ரீத்திக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. சாலையோரம் அவரை அமர வைத்தபோது, திடீரென வலிப்பு வந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி