உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது

வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது

சென்னை: சென்னையில், வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய வட மாநிலப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.சென்னை அசோக் நகர் 10வது தெருவில் குடியிருக்கும் சரிதா என்பவரது வீட்டில் நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் பலர் வந்துள்ளனர். நேற்று இரவு வீட்டில் போதிய இடம் இல்லாததால் சிலர் வாசலில் தூங்கி உள்ளனர். இன்று ( மே12) அதிகாலை 4 மணியளவில் மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட கார் ஒன்று, வாசலில் தூங்கியவர்கள் மீது ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அந்த தெரு முட்டுச்சந்து, காயமடைந்தவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு திரண்ட மக்கள் காரை ஓட்டி வந்த பெண்ணை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வைஷாலி என்பதும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை