மேலும் செய்திகள்
அம்மன் கோவிலில் தங்க தேர் புறப்பாடு
59 minutes ago
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago
ஸ்பைடர் மேன் போல தொங்கிய போதை ஆசாமி
1 hour(s) ago
நெசப்பாக்கம்: குப்பை கொட்டுவதற்காக, வீட்டின் அருகே சாலையை கடந்த பெண், கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். கே.கே.நகர் அடுத்த நெசப்பாக்கம், விஜயராகவபுரம் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் இந்திரா, 55. இவர், நேற்று காலை, குப்பை கொட்டுவதற்காக, வீட்டின் அருகில் உள்ள ராஜமன்னார் சாலை - விஜயராகவபுரம் மூன்றாவது தெரு சந்திப்பை கடந்தார். அப்போது, கே.கே., நகரில் இருந்து நெசப்பாக்கத்தை நோக்கி அதிவேகமாக சென்ற 'இன்னோவா கார்' இந்திரா மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த இந்திரா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாண்டிபஜார் போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரான திருச்சி, மேலகந்தர் கோட்டையை சேர்ந்த மகேஷ் குமார், 28, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
59 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago