உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மினி லாரி மோதி தொழிலாளி பலி

 மினி லாரி மோதி தொழிலாளி பலி

புழல்: செங்குன்றம் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார், 55; சலவை தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, செங்குன்றத்தில் பணி முடித்துவிட்டு, சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பாலவாயல் - சோத்துப்பாக்கம் சாலையில் சென்ற போது, பின்னால் வந்த மினி லாரி, ஜெயகுமார் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந் த ஜெயக்குமாருக்கு, தலையில் பலத் த காயம் ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயக்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மினி லாரி ஓட்டுநரான ஆத்துாரைச் சேர்ந்த ராகேஷ், 24, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்