உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  லாரி மோதியதில் தொழிலாளி பலி

 லாரி மோதியதில் தொழிலாளி பலி

மணலி: திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கணேஷ், 43, மணலியி ல் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்தார். இவருக்கு, சங்கீதா என்ற மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று அதிகாலை, மணலி, ஆண்டார்குப்பம் செக் போஸ்ட் - ஈச்சங்குழி இடையேயான, பொன்னேரி நெடுஞ்சாலையில், சாப்பாடு வாங்க நடந்து சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத லாரி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். செங்குன்றம் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனு ப்பினர். வழக்கு பதிவு செய்து, லாரியு டன் தப்பிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !