மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ
10-Apr-2025
பெரம்பூர்:பெரம்பூர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண், தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.இவர், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் வின்சென்ட் சர்ச்சில், 22, என்பவரை, நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.திருமணம் செய்து கொள்வதாய் வின்சென்ட் சர்ச்சில் கூறியதை, இளம்பெண் நம்பியுள்ளார். இதனால் அவர்கள் ஒன்றாக இருந்துள்ளனர். இதில் அப்பெண் கர்ப்பமாகியுள்ளார்.தான் கர்ப்பமானதால் திருமணம் செய்ய சொல்லி, இளம்பெண் கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் வின்சென்ட், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பது தெரிந்தால், பெண்ணின் பெற்றோருக்கு அவமானம் ஏற்படும் எனக்கூறி, கருவை கலைக்க வைத்துள்ளார்.இதற்கு பின்னரும், திருமணத்திற்கு உடன்படாமல் வின்சென்ட் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து அப்பெண், 2024, ஆக., மாதம் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இப்புகார் குறித்து, கமிஷனர் அலுவலகத்தில் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம், வின்சென்ட் சர்ச்சில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10-Apr-2025