உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, வெங்கடேசன் தெருவில், போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை, தனிப்படை உதவி ஆய்வாளர் பிரவீன் குமார் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வீடு ஒன்றில் போதை மாத்திரைகள் பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது. அதே பகுதியை சேர்ந்த லோகேஷ், 23, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 93,000 ரூபாய் மதிப்பிலான, 2,200 வலி நிவாரண மாத்திரைகள், மூன்று ஊசிகள் மற்றும் புதுச்சேரி மதுபானம், 27 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், தனியார் நீரிழிவு மருத்துவமனையில் வார்டு பாய் வேலை செய்யும் லோகேஷூக்கு, போதை ஊசி பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. அதன் காரணமாக, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன், மும்பையில் இருந்து, போதை ஊசி மற்றும் மாத்திரைகளை வாங்கி, விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை