உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சகோதரர்களை கொல்ல முயன்ற வாலிபர் கைது

சகோதரர்களை கொல்ல முயன்ற வாலிபர் கைது

சென்னை; விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ், 33; இவரது சகோதரர் மோகன்ராஜ், 28. இருவரும், பெசன்ட் நகர் பகுதியில் தங்கி, கார் ஓட்டுநர்களாக வேலை பார்த்து வரு கின்றனர். இரு தினங் களுக்கு முன், அஷ்டலட்சுமி கோவில் அருகே, பெசன்ட் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 31, என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் அங்கிருந்து சென்றனர்.ஆனால், மொபைல் போன் மூலம் மணிகண்டன் ஆபாசமாக பேசியுள்ளார். ஆத்திரமடைந்த சகோதரர்கள், மணிகண்டன் வீட்டிற்கு சென்று, வாக்குவாதம் செய்தனர். அப்போது மணிகண்டன், வீட்டில் இருந்த கத்தியால், விமல்ராஜ், மோகன்ராஜை குத்தியுள்ளார். காயமடைந்த இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். திருவான்மியூர் போலீசார், மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ