சிகரெட் பிடித்த சிறுவனை கண்டித்த வாலிபருக்கு சரமாரி வெட்டு
சைதாப்பேட்டை:சைதாப்பேட்டை, சலவையர் காலனியைச் சேர்ந்தவர் திவாகர், 22. இரு நாட்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சிகரெட் புகைத்து கொண்டிருந்தான். அவனிடம், 'ஏன் சிகரெட் பிடிக்கிறாய்' என கேட்டு அறிவுரை கூறி உள்ளார். அதை ஏற்க மறுத்த சிறுவன், அவரை தகாத வார்த்தையில் பேசி அங்கிருந்து சென்றான்.சிறிது நேரம் கழித்து, தன் நண்பர் சதீஷ், 21, தட்சா, 22, ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்த திவாகரிடம், நண்பர்கள் மூன்று பேருடன் வந்த சிறுவன் தகராறு செய்தான். பின், அனைவரும் சேர்ந்து கத்தியால் திவாகரை வெட்டினர். பீர் பாட்டிலால், சதீஷ் தலையில் தாக்கினர்.காயமடைந்த இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சைதாப்பேட்டை போலீசார், 16 வயது சிறுவன், அவரது நண்பர் கவுதம், 21, ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான இரண்டு பேரை தேடுகின்றனர்.