உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 12 ஆண்டுகள் தலைமறைவு வாலிபர் கைது

12 ஆண்டுகள் தலைமறைவு வாலிபர் கைது

வியாசர்பாடி :கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடியை சேர்ந்த காமேஷ் என்பவர், 2013 ஜன., 5ல் கொலை செய்யப்பட்டார். இதில், யுவராஜ் என்பவரை, வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை, அல்லிக்குள வளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜாமினில் வெளியே வந்த யுவராஜ், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கடந்த ஜூலை, 16ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தலைமறைவாக இருந்து வந்த யுவராஜ், 35, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை