உள்ளூர் செய்திகள்

சங்காபிஷேக விழா

குறிச்சி : மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில், 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது.சுந்தராபுரத்தை அடுத்த மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில், நேற்று காலை 7.00 மணிக்கு, விழா மகா யாகத்துடன் துவங்கியது. தொடர்ந்து பூர்ணாகுதியும், 11.00 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மதியம் அலங்கார ஆராதனையும் நடந்தன.இன்று காலை 6.00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், 9.00 மணிக்கு மாரியம்மன் கண் திறத்தல், இரவு 7.00 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை யாதவ, குருபர ஊர் பெரியதனக்காரர்கள் மற்றும் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை