1,200 மரக்கன்றுகள் மக்களுக்கு வினியோகம்
அன்னுார்; அன்னுார் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கைகாட்டியில் நடந்தது. இதில் பழ வகைகள் மற்றும் வேம்பு, ஆல், அரசு உள்ளிட்ட பல்வேறு வகையைச் சேர்ந்த 1200 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.மேலும் மரக்கன்றுகள் நடுவதற்கும், பராமரிப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. மரம் வளர்ப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.நிகழ்ச்சியில், 'மரம் வளர்த்தால், மழை பெறலாம், ஒவ்வொரு ஆண்டும் ஒரு மரக்கன்று நடுவதை பொதுமக்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். காடுகளின் பரப்பு குறைந்து வருகிறது. பூமியின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. மரம் நடுவதன் வாயிலாக இதை தடுக்க முடியும்,' என்றனர். நிகழ்ச்சியில், சங்கத் தலைவர் அம்பாள் நந்தகுமார், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர்லட்சுமண மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.