மேலும் செய்திகள்
தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
18 hour(s) ago
ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் நகல்
18 hour(s) ago
பழநி பாதயாத்திரை குழுவின் வைரவேல் திருவிழா
18 hour(s) ago
நல்லகண்ணு மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி
18 hour(s) ago
கோவை : இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட குரூப்-2 தேர்வு, வரும் 30ல் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. கோவையில் 20 ஆயிரத்து 627 பேர் இத்தேர்வு எழுதுகின்றனர்.தமிழ்நாடு பொது தேர்வாணையம் சார்பில், கடந்த ஜூன் 17ல் குரூப்-2 தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பின், ரத்து செய்யப்பட்டு, ஜூலை 3ல் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அன்றும் தேர்வு நடக்கவில்லை. இறுதியில் வரும் 30ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் 46 மையங்கள், பொள்ளாச்சியில் ஐந்து மையங்கள் என, மாவட்டத்தில் 41 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை, 20 ஆயிரத்து 627 பேர் எழுதுகின்றனர். வரும் 28 வரை தபால் மூலம் ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் முகவரிச் சான்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தகவல் பிரிவை அணுகி, இன்டெர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago