உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காளிங்கராயன் குளத்தில் 233வது வாரமாக களப்பணி

காளிங்கராயன் குளத்தில் 233வது வாரமாக களப்பணி

கோவில்பாளையம்;காளிங்கராயன் குளத்தில், 233வது வாரமாக, நேற்று களப்பணி நடந்தது. கோவில்பாளையம் அருகே, 120 ஏக்கர் பரப்பளவு உள்ள காளிங்கராயன்குளம் உள்ளது. இந்த குளத்தில் கவுசிகா நீர்க் கரங்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று களப்பணி நடக்கிறது.233வது வாரமாக, நேற்று குளக்கரையில் பனை விதைகள் நடுதல், மரக்கன்றுகள் நடுதல், களைகள், புதர்கள் அகற்றுதல் ஆகிய பணியில் 25க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். தன்னார்வலர்கள் கூறுகையில், 'இக்குளத்தில் அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நீர்வழிப் பாதையில் மண்மேடுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பணிகள் செய்யப்படவுள்ளன. ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை