உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 2024ல் 31 லட்சம் புதிய கணக்குகள்

2024ல் 31 லட்சம் புதிய கணக்குகள்

கோவை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், நாடு முழுவதும், 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு, 31 லட்சம் புதிய கணக்குள் துவங்கப்பட்டுள்ளன.'சுகன்யா சம்ரித்தி யோஜனா' என்றழைக்கப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம், 2015-ம் ஆண்டு, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுசேமிப்பு திட்டம். மகள்களின் எதிர்காலத்துக்காக முதலீடு செய்யும் பெற்றோருக்கு, இத்திட்டம் சிறந்த வாய்ப்பாக உள்ளது.10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், பெற்றோர் பெயரில் கணக்கு துவங்கலாம். 15 வயது வரை முதலீடு செய்யலாம்; அதன் பின், ஆறு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யாமலேயே, கூட்டு வட்டி அளிக்கப்படும். இந்த நடைமுறையால், திட்டம் துவங்கியது முதல் இதுவரை, பரவலாக வரவேற்பு பெற்று வருகிறது.2020ம் ஆண்டு, ரூ.1.86 கோடியாக இருந்த கணக்குகள், 2021ம் ஆண்டு ரூ.2.32 கோடி, 2022ம் ஆண்டு ரூ.2.72 கோடி, 2023ம் ஆண்டு ரூ.3.12 கோடி, கடந்தாண்டு 3.43 கோடி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், நாடு முழுவதும் 31 லட்சம் கணக்குகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. இதன் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்கும் வகையில், சிறப்பு முகாம்கள், விழிப்புணர்வு என, பல்வேறு நடவடிக்கைகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை