உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் பறக்கும் படையில் சோதனை ஆவணமில்லாத பணம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையில் சோதனை ஆவணமில்லாத பணம் பறிமுதல்

- நிருபர் குழு -தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பொள்ளாச்சி பகுதியில், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 5 லட்சத்து, 11 ஆயிரத்து, 140 ரூபாய்; உடுமலையில் 2.78 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.* பொள்ளாச்சி அருகே சாலைப்புதுாரில், நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனை மேற்கொண்டனர்.அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டனர். அதில், செஞ்சேரிமலையை சேர்ந்த முருகன், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 2 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.* பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில், பறக்கும்படை அதிகாரிகள், அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டனர். அதில், பொள்ளாச்சியை சேர்ந்த நிதிஷ்குமார் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 280 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.* பொள்ளாச்சி, கோபாலபுரம் சோதனைச்சாவடியில், நிலையான கண்காணிப்பு குழுவினர், அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், எர்ணாகுளத்தை சேர்ந்த ஹரீஸ், முறையான ஆவணங்களின்றி கொண்டுவந்த, 82 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.* பொள்ளாச்சி அருகே நெகமம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகனச்சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தில், நல்ஊத்துக்குளியைச்சேர்ந்த விஜயகுமார், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 83 ஆயிரத்து, 860 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.* உடுமலை சட்டசபை தொகுதி, தேர்தல் பறக்கும் படை - 2, அலுவலர் நடராஜன், எஸ்.ஐ., செல்வம் தலைமையிலான குழுவினர், உடுமலை வாசவி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மொபட்டில், உரிய ஆவணங்கள் இல்லாமல், உடுமலையை சேர்ந்த ரத்தினகுமார் கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 58 ஆயிரத்து, 500 ரூபாய் பறிமுதல் செய்து, கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தாசில்தார் சுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அத்தொகை சீலிட்ட கவரில் வைத்து, சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.* உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அந்தியூர் சோதனை சாவடி அருகே, பறக்கும் படை- ஏ குழுவினர் வாகன தணிக்கை செய்த போது, ஹூண்டாய் வென்யூ காரில், எவ்வித ஆவணமும் இல்லாமல், கொண்டு வரப்பட்ட, 55 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.இதே போல், பூசாரிபட்டி அருகே, பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொள்ளாச்சியை சேர்ந்த மதியழகன் எவ்வித ஆவணங்களும் இல்லாமல், 65 ஆயிரத்து 500 ரூபாயை டூவீலரில் எடுத்து வந்தது தெரியவந்தது.தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், பணத்தை கைப்பற்றி, உடுமலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பணத்தை ஒப்படைத்தனர். நேற்று ஒரே நாளில், பறக்கும் படையினரால், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை